சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் நளின் அபயசேகரவை ஆணைகுழுவிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பேராசியர் இரட்ண ஜீவன் கூல் குறிப்பிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக மகிந்த தேசப்பிரிய பதவி விலக தீர்மானித்துள்ளதாகவும் , கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேரா என்பவரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது..
இந்த நிலையில் தேர்தல் ஆணியாளரின் , பதவி விலகல் காரணமாக தேர்தல் ஆணையகம் செயழிலந்து போகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் தேர்தல் நடைமுறைகளை ஆணையாளர் நாயகமே அனைத்தையும் தீர்மானிக்கும் பழைய முறைக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மகிந்த தேசப்பிரியவின் குறித்த தீர்மானம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.