இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 20 பேரையும், 75 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில், செப்டம்பர் 27ஆம் தேதி பிடிக்கப்பட்ட 4 மீனவர்கள் அக்டோபர் 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை 4 படகுகளுடன் 16 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள பன்னீர் செல்வம், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.