தமிழகத்தில் முதல் கட்ட மருத்துவக்கலந்தாய்வு

 தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போய்விடும். 2 ஆயிரத்து 253 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ளன.

 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் 6 இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் படிக்க மொத்தம் 760 இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 290 இடங்கள். அரசு ஒதுக்கீட்டுக்கு 470 இடங்கள் இருக்கின்றன.  மேலும் 2 இ.எஸ்.ஐ.கல்லூரிகளில் படிக்க 200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 70 ஆகும். அந்த இடங்கள் தவிர அரசு ஒதுக்கீட்டாக 130 இடங்கள் வந்து உள்ளன.  மொத்தம் மருத்துவ கல்லூரிகள் 28 ஆகும். மொத்த மருத்துவ இடங்கள் 3 ஆயிரத்து 610. அகில இந்திய ஒதுக்கீட்டாக மொத்தம் 757 இடங்கள் இருக்கின்றன. தமிழக ஒதுக்கீட்டாக 2 ஆயிரத்து 853 இடங்கள் இருக்கின்றன.  

அரசு பல் மருத்துவக்கல்லூரி ஒன்று உள்ளது. அதில் 100 இடங்கள். அகில இந்திய ஒதுக்கீடு 15 ஆகும். மீதம் உள்ள 85 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்துள்ளது. சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 17இருக்கின்றன. அந்த கல்லூரிகளில் மொத்தம் 1,610 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய மருத்துவ இடங்களாக 640 சென்றுவிடும். மீதம் உள்ள இடங்கள் 970 ஆகும். இந்த இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்துள்ளன.  தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.

இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் முதலிய ஒதுக்கீட்டுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது.  விளையாட்டு பிரிவு மாணவர்கள் மொத்தம் 3 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். விளையாட்டு பிரிவில் சான்றிதழ் சரிபார்த்து விளையாட்டில் சிறந்த மாணவர்கள் பட்டியலை மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு அனுப்புவது அண்ணாபல்கலைக்கழகம். அதன்படி மொத்தம் மாணவ-மாணவிகள் 7 பேர் அடங்கிய பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் மருத்துவ தேர்வுக்குழுவுக்கு நேற்று முன்தினம் இரவே அனுப்பி விட்டது.

7 பேர்களில் 3 பேர்கள் மருத்துவ கலந்தாய்வில் இன்று (திங்கட்கிழமை) தேர்ந்து எடுக்கப்படுவார்கள். கலந்தாய்வு 25-ந்தேதி முடிவடைகிறது.

அரசுஎம்பிபிஎஸ்கலந்தாய்வுகல்லூரிதமிழ்நாடுபடிப்புமருத்துவம்வெற்றிடம்
Comments (0)
Add Comment