வேமோவின் வண்டிகள் பாதுகாப்பானவை என, நிரூபித்த பின், அமெரிக்காவில் நான்கு மாகாணங்களில் இவற்றை பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளது கூகுள். தானாகவே வாகனத்தை செலுத்தும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மட்டுமல்ல, வாகனத்தின் சகல கோணங்களிலும், 200 அடி துாரம் வரை, ‘பார்த்து’ உணரும் லேசர் சக்தியுள்ள, ‘லிடார்’, ரேடியோ அலைகளை பயன்படுத்தும் ரேடார் மற்றும் பல நுாறு உணர்வான்கள், ஒளிப்படக் கருவிகள் என, அனைத்தையும் வேமோவே தயாரிக்கப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது கூகுள். பிற வாகன தயாரிப்பாளர் களுக்கும் இத்தொழில்நுட்பங்களை விற்க, வேமோ தயாராக உள்ளது. ஹோண்டா உள்ளிட்ட சில வாகன ஜாம்பவான்கள் அதை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.
தானாகவே வாகனத்தை செலுத்தும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மட்டுமல்ல, வாகனத்தின் சகல கோணங்களிலும், 200 அடி துாரம் வரை, ‘பார்த்து’ உணரும் லேசர் சக்தியுள்ள, ‘லிடார்’, ரேடியோ அலைகளை பயன்படுத்தும் ரேடார் மற்றும் பல நுாறு உணர்வான்கள், ஒளிப்படக் கருவிகள் என அனைத்தையும் வேமோவே தயாரிக்கப் போவதாக, அண்மையில் அறிவித்துள்ளது கூகுள்.