தியாகதீபம் திலீபன்; நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது…

யாழ் நல்லூர் பின் வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் ; நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தலைமையில் அங்கு துப்பரவுப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது
அதன் பின் தியாகி  திலீபனின்   திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவரது தியாக வரலாற்றை சுருக்கமாக விளக்கும் பதாதைகள் சிங்களம் ,தமிழ் .ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த பதாதைகளே நேற்றிரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரச மற்றும் படைப்புலனாய்வாளர்களோ  அல்லது அவர்களது அடிவருடிகளே இந்த ஈனத்தனமான செயலை புரிந்திருக்க வேண்டுமென  முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே தியாகி  திலீபனின் தூபி பகுதியை  சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட போது மாநகரசபை பணியாளர்கள் இராணுவ புலனாய்வாளகள் என கூறப்பட்டவர்களால்  மிரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ புலனாய்வாளகள்தியாகதீபம் திலீபன்பதாதையாழ் மாநகர சபை உறுப்பினர்
Comments (0)
Add Comment