தேர்தலுக்கான விண்ணப்பங்களை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும் – அன்பழகன்

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  

வருகிற 19.11.2016 அன்று நடைபெறவுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 20-10-2016 (வியாழக்கிழமை) அன்று மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேட்பாளர் நேர்காணல் 21-10-2016 அன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரம்.  விண்ணப்ப படிவம் தலைமைக் கழகத்தில் ரூ. 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.  இவ்வாறு அன்பழகன் கூறி உள்ளார்.

அன்பழகன்அரவக்குறிச்சிஅறிக்கைதிமுகதேர்தல்பணம்பொதுச்செயலர்விண்ணப்பம்
Comments (0)
Add Comment