நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த கெப் வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வவுனியா – மதவாச்சி வீதியில் கும்புக்கொல்ல பகுதியில் இன்று காலை 9 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 27 வயதான ஆண் ஒருவரும் 25 வயதான பெண்னொருவரும் ஒரு வயது குழந்தையும் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.