யு.எஸ்.பசுபிக் சமுத்திரத்தில் கலிபோர்னியா கரையோர தரை மட்டத்தில் விசித்திரமான ஊதா நிற உருண்டை ஒன்று தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கடலோரத்தில் ஆய்வு பயண வாகனமான Nautilusசில் விஞ்ஞானிகள் ஆய்வு நடாத்தி கொண்டிருந்த சமயத்தில் மிகவும் அழகான ஊதா உருண்டை ஒன்றை கண்ணுற்றனர்.இந்த உருண்டை இதுவரை இவர்கள் காணாத ஒன்றாகும். இது குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது வாழ்வின் ஒரு புதிய வடிவமாக இருக்கலாமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. வேற்றுலக மனிதனின் முட்டையாக இருக்கலாமா எனவும் சந்தேகிக்கப்படுகின்றதாக தெரிய வந்துள்ளது. அடையாளம் காணப்படாத இந்த ஊதா நிற குமிழ் விஞ்ஞானிகளை குழப்பமடைய செய்துள்ளது.