புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 22 பதவி வெற்றிடம்! வாகனம் இல்லை. சேவைகளை வழங்குவதில் சிக்கல். நிவர்த்தி செய்ய கோரிக்கை..

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் 30 ஆண்டு காலங்களுக்கு பின்னால் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில்,  தற்போது மக்களின் நீண்டகாலமாக நிலவும் பிரச்சனைகளை நீக்கும் முகமாக துரிதமாக செயற்பட முடியாமைக்கு பதவி வெற்றிடங்கள் மற்றும் வாகனம் இன்மை பாரிய தடையாக உள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது சபையானது 968 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்டதும் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய ஒட்டுசுட்டான்,ஒலுமடு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய 3 உப அலுவலகங்களை கொண்ட அபிவிருத்திக்காக செயற்ப்படும் சபை ஆகும்

 இச்சபையானது  வருமானத்தை ஈட்டுகின்ற அலுவலகமாக செயற்ப்படுவதாலும்  மக்களின் தேவைகளை கணிசமான அளவு எமது சபையினால் அவ்வப்போது முன்னெடுத்து செல்வதாலும் அதிகளவான வேலைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு உண்டு.

இருப்பினும் இவ்வாறான வேலைகளை மேற்கொள்வதற்காக எமக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணியானது 80 மட்டுமே இவ் அனுமதியானது முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் 2013.01.01  இல்  அனுமதிக்கப்பட்டிருந்ததுடன்,

அவ்வாண்டின் பின்னர் இதுவரையில் மேலதிக ஆளணி உருவாக்கம் மேற்கொள்ளப்படாமையாலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆளணியைக்கூட அமைச்சுக்களால் நிரப்பமுடியாதுள்ளமையினாலும் சபையின் பல வேலைகள் தாமதமக்கப்படுவதுடன் வினைத்திறனான சேவையை வழங்க முடியாதுள்ளது

ஆவணப்படுத்தப்பட்ட பதவிகளில் 08 வெற்றிடங்கள் ஏற்ப்பட்டுள்ளன  மேலும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியில் 14 வெற்றிடங்கள் காணப்படுகிறது.

அத்தோடு எமக்கு வாகன வசதி இல்லை என்னுடைய சொந்த மோட்டார் சைக்கிளிலிலேயே சென்று சேவைகளை செய்துவருகிறேன்.

இவ்வாறு எங்களுடைய வாகன வசதி மற்றும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் போது 30 வருடகால யுத்தத்தில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான மக்களுக்கு நீண்ட காலத்தின் பின்னர் உருவாகியுள்ள எமது சபையினால் சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் இது தொடர்பில் உரிய தரப்பினரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும்  தெரிவித்தார்  

ஆளணிபற்றாக்குறைபிரதேசசெயலகம்புதுக்குடியிருப்பு
Comments (0)
Add Comment