தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக – இலங்கை மீனவர்களின் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27.1.2014 அன்று சென்னையில் நடைபெற்றது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை கொழும்பு நகரில் 13 –ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த பேச்சு வார்த்தைக்கு முன்பு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் இதை எல்லாம் மீறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகின்றனர். நேற்று தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்து, அதில் இருந்த மீனவர்களைத் தாக்கினர். பின்னர் 8 விசைப்படகுகளில் இருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 32 பேரை கைது செய்ததுடன், 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விபரம் வருமாறு;–
ஜெகதாப்பட்டினம் வைரக்கண்ணுக்கு சொந்தமான விசைப் படகில் சென்ற அவரது மகன் 1. கணேசன்(வயது 45), 2.சின்னையன்(50), 3.சம்திசன்(55), 4.கண்ணப்பன்(60), பெருமாளுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற அவரது மகன்கள் 5. முகிலன்(18), 6. பிரசாத்(25), 7.விக்னேஷ்(23), மற்றும் 8.ஜெயபால்(50), 9.சன்னியாசி(40), அஞ்சப்பன் என்பருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற அவரது மகன்கள் 10.வீரகுமார்(23), 11. வீரதாஸ்(26), ஆண்டி மகன் 12.சுப்பையா(50), ராஜேந்திரன் மகன் 13. விவேக்(19) ஆகியோர் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் செல்லாச்சி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற பள்ளிகொண்டான் மகன் 14.சிவபெருமாள்(55), 15. முருகன்(55), 16.மாரியப்பன(35), 17. பாபு(27), கமலநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 18. பாபு(40), 19.இடும்பன்(60), 20. பாண்டி(30), 21. சக்தி(25), வளர்செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 22.பழனியாண்டி(55), அவருடைய மகன்கள் 23.கமலநாதன் (30), 24.பார்த்திபன்(23), முத்து மகன் 25.பிரபாகரன்(19) ஆகிய மீனவர்கள் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர்.
செல்வநாதனுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 26.பஞ்சவர்ணம்(60), அவரது மகன் 27.தமிழ்ச்செல்வன்(29), பக்கிரிச்சாமி மகன் 28.பிரகாஷ்(26), 29. செந்தில்(32), ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ஆறுமுகம் மகன் 30.சதீஷ்(19), 31.ஆறுமுகம்(40), சிவபெருமாள் மகன் 32.ஸ்ரீராம்(19) ஆகிய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 32 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுக கடற்படை தளத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்று, மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் பதற்ற நிலை காணப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.