பெட்ரோல் விலை தொடர்ச்சியாக 7வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூபாய் 3.02 காசுகள் குறைந்துள்ளது.
அதே நேரம் டீசல் விலை ரூபாய் 1.47 காசுகள் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொருத்து ஒவ்வொரு மாதமும் இரு முறை எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மறு நிர்ணயம் செய்கின்றன. அதன் அடிப்படையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்தன.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 25 டாலருக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.02 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை கடைசியாக கடந்த 18ந்தேதி லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலியாக தொடர்ச்சியாக 7வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.47 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.