புகார்கள் மீது தீர்வு காண்பதற்கு பிரத்யேக தொலைபேசி எண்ணை இந்த இணைய தளங்கள் ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது. அதோடு திருமணத் தகவல் மையங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தங்கள் செயல்பாடுகளை தாக்கல் செய்வதும் புதிய விதிமுறைகளில் இடம்பெற உள்ளதாக அமைச்சக உயரதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
திருமணத் தகவல் இணைய தளங்களில் பணமோசடி உள்ளிட்ட தவறுகள் அதிகரித்து விட்டதாக புகார்கள் கூறப்படுவதையடுத்து புதிய விதிமுறைகளை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.