தமிழக முகாம்களில் இருந்து போலி முகவர்கள் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையினர் முகாம்களுக்கு சென்று எச்சரித்துள்ளனர்.
இதற்காக பொய் பேசி போலி முகவர்கள் இடைத் தரகர்களை அகதிமுகாமுக்குள் வசிப்பவர்களிடம் அதிகளவிலான பணம் அறவிட்டு அவர்களை ஏமாற்றி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மக்கள் பொய்யான தகவல்களை நம்பி வாழ்க்கயை தொலைத்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளது
இவர்கள் தொடர்பான உண்மையான தகவல்களை தருபவர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கப் படும் என தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர் .