மகிந்தையை சந்தித்தது துரோகம் இல்லை: ஆயுதம் வழங்கியது தான் துரோகம் – தமிழிசை

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்ததுதான் துரோகம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

ராஜபட்சவை நரேந்திர மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

இலங்கைப் பயணத்தின்போது ராஜபட்சவை – பிரதமர் நரேந்திரமோடி சந்தித்ததை தமிழர்களுக்குச் செய்த துரோகம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்ததுதான் துரோகம் ஆகும். நரேந்திரமோடியின் இலங்கை வருகையால், அங்குள்ள தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் நம்பிக்கை துளிர் விட்டும் உள்ளனர். தற்போது நல்ல திட்டங்களுக்கு வழிகோலப்படுகின்றன. இதனை இளங்கோவன் ஏற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆட்சிஆயுதம்இலங்கைஈ.வி.கே.எஸ். இளங்கோவன்காங்கிரஸ்செளந்தரராஜன்தமிழிசைதலைவர்துரோகம்பாஜகமாநில
Comments (0)
Add Comment