மஹிந்த பிரதமராக பதவியை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு…

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

அதோடு மகிந்த  தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை இன்றைய தினம்  மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆராய்ந்தது.

இதன்போதே மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம்  விதித்துள்ளது.

மேலும்  குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதுடன் எதிர்வரும் 12ஆம் 13ஆம் திகதிகளில் விசாரணை நடத்துவதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உத்தரவுதடைநீதிமன்றம்பிரதமர்மகிந்த
Comments (0)
Add Comment