அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐஐடி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.