முக்கிய வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

முக்கிய வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் வீட்டு கடன் உட்பட அனைத்து வகையான கடன்களுக்கான இ.எம்.ஐ. கட்டணங்களில் மாற்றம் இருக்காது என்று எதிர்பாக்கப்படுகிறது.

இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ரெப்போ தொடர்ந்து 6.75 சதவீதமாகவே இருக்கும். ரெப்போ விகிதத்தை குறைக்கும் சூழல்கள் ஏற்படும் போது குறைக்கப்படும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே போல் மத்திய ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்திருக்கும் வைப்புத்தொகையான ரொக்க ஒதுக்கீடு விகிதமும் 4-ஆக தக்க வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணவீக்க விகிதத்தை 5 சதவீதமாக ஆக குறைக்க ஆர்.பி.ஐ. இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் உணவு பொருட்கள் வழங்கல் துறையை மேம்படுத்த வேண்டும் என்று ஆர்.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டாம் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.4 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆர்.பி.ஐ.பணவீக்கம்ரகுராம் ராஜன்ரிசர்வ் வங்கி ஆளுநர்ரெப்போ விகிதம்
Comments (0)
Add Comment