முதல்வர் விரைவில் வீடு திரும்பவுள்ளார்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதகாலமாக, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் கூறப்பட்டு வருகிறது. எனினும், அவரது உடல்நிலை பற்றி பல்வேறு தரப்பிலும் சந்தேகம் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன் அப்போலோ மருத்துவமனை வந்து, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்றும், மருத்துவர்கள் அளித்து வரும் சிகிச்சைகள் எதிர்பார்த்தபடி உள்ளன என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, இதயம், நுரையீரல் பாதிப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு, ஜெயலலிதாவின் உடல்நிலை சிறப்பாக ஒத்துழைப்பதால், அவர் பூரண குணமடைந்து வருகிறார் என பொன்னையன் குறிப்பிட்டார். விரைவிலேயே வீடு திரும்பி, தனது பணிகளை நல்ல முறையில் ஜெயலலிதா தொடர்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுகஅப்பலோசெய்தியாளர்கள்தமிழகம்மருத்துவமனைமுதலமைச்சர்
Comments (0)
Add Comment