முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணம் முடிவல்ல என்ற இறுவட்டு வெளியீடு

நேற்று முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப்பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ’முள்ளிவாய்க்கால் வலிசுமந்த மரணம் முடிவல்ல’ என்ற  இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்க மாணவன் நிருபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரியும், நாட்டுப்பற்றாளரின் மகளுமான, முள்ளிவாய்க்காலை சேர்ந்த ’சுகிர்தா’ அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன .
சமூகசேவகர் பழ கயல்லதா தயாரிப்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வெளியீட்டுப்பிரிவின் வெளியீட்டில் உருவான இறுவட்டு, தேனிசை இளவல் விமலின் இசையில் உருவானது.
இந்த இறுவட்டில் பாடல்களை வன்னியூர் கிறுக்கன், திலகநாதன் கிந்துஜன், கவிக்காவலன், சுயானி, பார்த்தீபன், சுஜன், ரசிக்குமார் ஆகியோர் எழுதியுள்ளார்கள்.
பாடலைப் பாடியவர்கள் எழுச்சிப்பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் புதல்வர்களான கோகுலன், குகன், சகிலன், டார்வின்  மற்றும் ஆனந்தவாணி ஜெயசீலன், கந்தப்பு ஜெயந்தன், தமிழன் ராகவாயது, பி.எல்.ரெஜிஸ், கிருசிகா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளார்கள்.
இந்த இறுவட்டினை சட்டத்தரணியும், யாழ்நகரசபை உறுப்பினருமான, விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் வெளியீட்டுவைத்துள்ளார்.
இறுவட்டுதமிழ்தேசிய மக்கள் முன்னணிமுள்ளிவாய்க்கால்முள்ளிவாய்க்கால் வலிசுமந்த மரணம் முடிவல்ல
Comments (0)
Add Comment