ரயில் நிலையங்களில் எச்சில் துப்புபவர்களே, அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி கூறியுள்ளார்.
மும்பை ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவதால் அது அசுத்தத்தை ஏற்படுத்துகிறது. இனி எச்சில் துப்பினால், அவர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்ய வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி கூறியுள்ளார்.
ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்வோரிடம் அபராதக் கட்டணம் வசூலித்து வந்த போதிலும், இத்தகைய செயல்கள் குறையாத நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரி கூறியுள்ளார்.