ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த மாதம் 18-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.  இதனை அடுத்து 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இது குறித்து 3 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதனை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. மேலும், இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்குசுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு வாதிடப்பட்டுள்ளது.

மேலும், விடுதலை குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு தகவல் தெரிவித்தது என்றும் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு முடிவு எடுக்காமல் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. எனவே மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கைதிகளின்ரஜீவ் கொலைவழக்குவிடுதலை
Comments (0)
Add Comment