வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – இராணுவத் தளபதி

வடக்கு கிழக்கில் உள்ள  இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கையை  குறைப்பதற்கோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது தொடர்பாக  தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாகவும், இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாகவும் வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும்,

ஆனால் முகாம்களுக்கு இடையில் வளப்பகிர்வு நடவடிக்கைகளே இடம்பெறுவதாகவும் அவர் கூரியுள்ளார்.

இதேவேளை உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு, அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் சிலரும் சுயலாபத்தை தேடிக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிபிடத்தக்கது.

 

அகற்றப்படாதுஇராணுவ முகாம்கள்இராணுவத் தளபதிகிழக்கில்வடக்கு
Comments (0)
Add Comment