தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏ முத்தையா பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் 89 வயக்காட்டு பொம்மைகள் இருப்பதாகக் கூறினார்.
இதனால், திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழில் வயக்காட்டு பொம்மை என்றால், அது ஒன்றம் நாடாளுமன்றத்தில் சொல்லக்கூடாத சொல் அல்ல. கெட்ட வார்த்தை அல்ல.
அதிமுக உறுப்பினர் பேசுகின்ற போது யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகின்றார்கள் என்று புரியவில்லை.
ஆளுங்கட்சி உறுப்பினர், வயலில் இருக்கும் வயக்காட்டுப் பொம்மைகளைப் பற்றிப் பேசினார். இங்கு இருக்கின்றன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களைத் தான் குறிப்பிடுகிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று புரியவில்லை என பதில் அளித்தார்.