விசுவமடுவில் மாற்றுத்திறனாளிகள் குடும்பம் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது…

முல்லைத்தீவு , விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் வசித்து வரும்  மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பம் ஒன்றின் மீது  சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர்  தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் விசுவமடு தலைமை பணிமனையில் பணியாற்றும் குறித்த உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவரும் மதுபோதையில்   சென்று மாணிக்கபுரத்தில்  தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பம் புதுக்குடியிருப்பு பொலீஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து  குறித்த இருவரும்  கைதுசெய்யப்பட்டு பொலீஸ் காவலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விசுவமடு மாணிக்கபுரம்,இளங்கோபுரம் பகுதிகளில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் சிலர் மதுபோதையில் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்பாதுகாப்பு உத்தியோகத்தர்மாணிக்கபுரம்மாற்றுத்திறனாளிகள்முல்லைத்தீவுவிசுவமடு
Comments (0)
Add Comment