தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர்.
ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் உள்ளது.
இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு,
விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.