தமிழீழ விடுதலைப்புலிகளின் வெடிபொருட்கள் உடை மாறும் கொடியுடன் முச்சக்கர வண்டியில் பயணித்தபோது நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர் ஒருவர் தப்பியோடியிருந்தார்
இந்நிலையில் தப்பியோடியவரை இராணுவம் பொலிசார் புலனாய்வாளர்கள் இணைந்து தேடிவந்த நிலயில் குறித்த வெடிபொருள் கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அரச புலணாய்வாளர்களது தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகள் அடிப்படையில் நேற்று மதியம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்
தொடர்ச்சியாக விசாரணை மற்றும் தேடுதல்களை நடத்திவரும் அரச புலணாய்வாளர்கல் மற்றுமொரு சந்தேக நபரை நேற்று இரவு 8 மணியளவில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கைது செய்துள்ளனர்
இந்த சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதோடு தப்பியோடியவரை தேடும் பணியும் தீவிரமாக இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் தப்பியோடியவரை மாங்குளம் பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்