கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கை வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்தது.
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று, இன்றுடன் (புதன்கிழமை) 14 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில்அதனை நினைவுகூரும் வகையில் மலையக மக்கள் அஞ்சலி நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.
ஹற்றன் நகரில் , ஹற்றன் பொலிஸார் , நகர வர்த்தகர்கள் மற்றும் ஹற்றன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது விளக்கேற்றி, மக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
நிகழ்வில் ஹற்றன் நகரிலுள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், ஹற்றன் டிக்கோயா நகரசபையின் தலைவர் எஸ்.பாலசந்திரன், அதன் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிகபப்டுகின்றது.