தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 23 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரியுள்ளார். மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள வழக்குகளை தளர்த்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள பிரிவினால் முன்னெடுக்கப்படும் ஆறு மாத கால புனர்வாழ்விற்கு சந்தேகநபர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான வழக்குகள் இலகுபடுத்தப்படும் என புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
சிறிய குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட 23 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.