கொழும்பில்,நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை 22/08/2014 கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணியளவில் கிளிநொச்சிக்குச் சென்ற இவர்கள் இராணுவ முகாம்களுக்குச் சென்றதுடன் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மத்திய நிலையத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.