கிளியில் மீண்டும் விசாரணை குழுவின் நாடக அரங்கேற்றம்!

காணாமல் போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்வதாக கூறும்  மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­குழு கிளி­நொச்­சியில் மீண்டும் அமர்­வு­களை நடத்­த­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இது­கு­றித்து ஆணைக்­குழு வெளியிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, காணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக எதிர்­வரும் 25ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல் 28ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை வரை­யி­லான மூன்று தினங்கள் அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. இந்த அ­மர்­வுகள் அனைத்தும் கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி­வ­ரையில் நடை­பெ­ற­வுள்­ளன.
25, 26ஆம் திக­தி­களில் கரைச்சி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­காகவும் 27ஆம் திகதி கண்­டா­வளை பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­ப­ட்ட­வர்­க­ளுக்­காகவும் 28ஆம் திகதி பூந­கரி மற்றும் பச்­சிலைப்பள்ளி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­காகவும் அமர்­வுகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.
இந்த அமர்­வு­க­ளின்­போது சாட்­சி­ய­ம­ளிப்­போ­ருக்­கான அழைப்­புக்கள் மாவட்ட செய­ல­கத்தின் ஊடாக விடுக்­கப்­பட்­டுள்­ள­தோடு புதி­தாக முறைப்­பா­டு­களை பதிவு செய்­வ­தற்கும் முடி­யு­மென ஆணைக்­குழு வெளியிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை பெப்­ர­வரி மாதம் 15ஆம் திக­தி­யுடன் ஆ­ணைக்­கு­ழுவின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வந்­தி­ருந்த நிலையில் மேலும் மூன்று மாத காலம் ஆணைக்­கு­ழுவின் கால எல்லை நீடிக்­கப்­பட்­டுள்­ள­து. அத்துடன் இறுதி அறிக்­கை­யொன்றும் கோரப்­பட்­டுள்­ளது. 1990ஆம் ஆண்­டி­லி­ருந்து 2009ஆம் ஆண்டு வரையில் இடம்­பெற்­றி­ருந்த காண­மல் ­போனோர் தொடர்­பான சம்­பவங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஆணைக்­கு­ழுவை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்த ராஜ­பக் ஷ நிய­மித்­தி­ருந்தார்.
அத­னைத்­தொ­டர்ந்து வட­க்கு, கி­ழக்கு உட்­பட நாடள­ாவிய ரீதியில் பல்­வேறு அமர்­வு­களை நடத்­திய இந்த ஆ­ணைக்­குழு 23ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான முறைப்­பா­டு­களை பதிவுசெய்­தி­ருந்­த­தோடு கடந்த ஆண்டு இடைக்­கால அறிக்­கை­யொன்­றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது மக்களையும் உலகையும் ஏமாற்றும் இந்த விசாரணைக் குழுவின் நாடக அரங்கேற்றம் எப்போது முடிகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆணைக்குழுகண்டாவளைகிளிநொச்சிஜனாதிபதிநாடகம்பூநகரிமகிந்தவிசாரணை
Comments (0)
Add Comment