இந்த சம்பவத்தில் வாகன சாரதி சிறு காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் நகர் பகுதியில் உள்ள கடவையை லான்ட் மாஸ்டர் வாகனம் கடக்க முற்பட்ட போது கடவையில் இருந்த சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால் இவ் வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது.