குமாரபுரம் படுகொலையின் 21ம் ஆண்டு நினைவு நாள்!

9 பெண்கள், 12 வயதிற்குக் குறைந்த 9 பிள்ளைகள் உள்ளிட்ட 24 பேர் ஸ்ரீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டதோடு, 26 பேர் படுகாயமடைந்தனர்.

மது போதையில் கிராமத்திற்குள் நுழைந்த ஸ்ரீலங்கா  படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ தினத்தில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குறித்த 8 பேரும் சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

போர்ச் சூழலில் எதிரிகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி இந்த வழக்கு பின்னர் விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

சந்தேகநபர்களில் இருவர் இருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 6 பேருக்கும் எதிராகவே இந்த வழக்கு விசாரனை நடைபெற்றது.

சாட்சியங்களில் காணப்பட்ட சந்தேகநபர்களை நிரபராதிகள் என கருதி அனைத்து குற்றச் சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற மஞ்சுல திலகரட்ன கடந்த வருடம் ஜுன் மாதம் 27ஆம் திகதி விடுதலை செய்தார்.

இந்த வழக்கு விசாரனையின் போது சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான குமாரபுரம் கிராம மக்கள், சிவில் அதிகாரிகள் உட்பட 121 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவம்குமாரபுரம்படுகொலைவழக்குவிடுதலைஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment