புதுக்குடியிருப்பில் உண்ணாவிரத போராட்டம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் இன்று செவ்வாய் கிழமை முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்யை தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு பிரதேச செயலாளரை சந்தித்த பின்னர் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிட்ட நிலையில் இன்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுவரும் நில மீட்புப் போராட்டம் இன்றுடன் 12வது நாளை எட்டியுள்ளது.
புதுக்குடியிருப்பு நகரப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு, வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை தமக்கு எந்தவாரு தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் போராட்ட வடிவத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.
19 குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 49 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தியே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவம்உண்ணாவிரதம்புதுக்குடியிருப்புபோராட்டம்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment