ஜெனீவா கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த சரத் வீரசேகர தலைமையிலான குழு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் நேற்று  நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும்   புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு நேற்று  ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை நடைபெற்றது.

இதில் புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்றும்  கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது விசனமடைந்த  சரத் வீரசேகர இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் இராணுவத்தினரே யுத்தத்துக்கு பின்னரான மீட்பு பணிகளை முன்னெடுக்கின்ரதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான இனப்படுகொலை இலங்கை இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் அமைப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நிகழ்வை நடத்தியவர்கள் சர்ச்சை நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதிலும் வாக்குவாதம் தொடர்ந்ததை அடுத்து சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டம்செண்பகம்ஜெனிவாவெளிநடப்பு
Comments (0)
Add Comment