தந்தையின் தாக்குதலால் படுகாயமடைந்த 12 வயது சிறுவன்

மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது இசைப்­பி­ரி­யன் என்ற  பாட­சாலை மாண­வன் தந்தையால் தக்கப்பட்டு , இரண்டு கால்­­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­­சா­லை­யில்  சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிறு­வன் கடந்த சில நாள்­­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­­தா­­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு சென்ற  சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளதாகவும் கூறப்படுகின்றது..

இதன் காரணம்மாக சிறு­­னின் இரு கால்­­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­­ளில் பலத்த காயங்­கள் காணப்­­டு­­தாக வைத்­தி­­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்ளன.

இதேவேளை குறித்த  சிறு­­னின் தந்தை ஏற்கனவே  தனது மக­ளுக்கு அடித்த குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­­வர் என பொலி­ஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உற­வி­னர்சிறு­வன்தந்தைபாட­சாலை மாண­வன்
Comments (0)
Add Comment