வடமாகாண மீனவ கூட்டமைப்பு, வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் ஊர்வலம், யாழ். இந்திய துணைத்தூதரகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
‘வடக்கு கடற்பரப்பு எல்லை மீறலை உடனே தடுத்து நிறுத்து, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல்வளத்தை அழித்து மீன்பிடிக்கும் இந்திய இழுவைப்படகுகளை நிறுத்து’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு, கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.