திருகோணமலை தோப்பூர் பட்டித்திடல் நலன்புரிநிலையத்தில் வசித்து வந்த சிவசோதி திலனிக்கா என்ற 13 வயது மாணவி மர்மமான முறையில் மரணமான சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. இந்த மரணம் கொலையா? தற்கொலையா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதன்காரணமாக மாணவியின் உடலம் தோப்பூர் வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாக தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மூதூர் சிறீலங்கா காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பூரில் இருந்து இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் பட்டித்திடல் நலன்புரிநிலையத்தில் தங்கியிருந்து ஏழாம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.