தனது சகோதரனுடனும் மற்றுமொரு சிறுவனுடனும் இந்தச் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். இதன் பின்னர், சகோதரனும் மற்றைய சிறுவனும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால், வீடு திரும்பாத குகதாஸ் தர்சனை அவனது தாய் தேடியதுடன், இது தொடர்பில் சம்பூர் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சிறுவனை தேடியபோது, குறித்த கிணற்றில் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.