சிறுமியும் அவரது சகோதரனும் விளையாடிக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த மதில் கடந்த 4 நாட்களுக்கு முன்னரேதான் கட்டி முடிக்கப்பட்டது என்று வீட்டுரிமையார்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த சிறுமியை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் ஏற்கெனவே சிறுமி உயிரிழந்துவிட்டாரென, வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார், விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.