மன்னார், பெரிய கார்சல் பிரதேசத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்நபர் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.பேசாளை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (08) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.