தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவையிட்டு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொள்கைப் பற்றும் இலட்சியத்தாகமும் கொண்ட பெண்ணாக தமிழினி விளங்கினார். தமிழர் விடுதலைக்காக தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக அவர் போர் படையிலும் அரசியல் துறைகளில் தமது உயிரைச் துச்சம் என மதித்துப் பணியாற்றியிருந்தார்.
கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்த அந்த வீரப் பெண்மணியின் நினைவுகள் தமிழர் மனங்களில் எப்பொதும் நிலைத்திருக்கும். பெண்களுக்கு முன்மாதிரியாக வீரப்பெண்மணியாக வாழ்ந்து மறைந்திருக்கும் தமிழினி தமிழர் மனங்களில் எப்போதும் நிலைத்திருப்பார். அவருக்கு எமது இதய அஞ்சலிகளை சமர்ப்பதோடு அவரின் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கேற்று அந்த வீரப்பெண்மணியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக. என்றுள்ளது.