பல்வேறு மட்டங்களில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்த உறுப்பினர்களுக்கே இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியமாகாணசபை உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திரன், அசாத் சாலி, மனோ கணேசன், எஸ்.எம்.மரைக்கார் மற்றும் பிரசன்னா சோலங்கராச்சி ஆகியோருக்கே தற்போதுஅமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதை பொருள் பாவனைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தனக்கு அச்சுறுத்தில் உள்ளதாக மேல் மாகாணசபை உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திரன் கூறியதற்கமைவாக, அவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின்பேரில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘எதிர்க்கட்சிகளின் போக்குகளை தொடர்ந்து விமர்சித்து வருவதால் தனக்கு உயிரச்சுறுத்தலுள்ளதாகவும் பல இணையத்தளங்கள் பிழையான கருத்துக்களை தன்மீது சுமத்திவருவதாகவும் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இதனால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.முல்லேரியா-கொட்டிகாவத்த பிரதேச சபை உறுப்பினர் பிரசன்ன சோலங்கராச்சிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவரது செயலாளர் உறுதிபடுத்தியுள்ளார்.