இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
டோட்டார் சைக்கிள் உரிமையாளர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வளவுக்குள் நுழைந்த அடையாளந்தெரியாத நபர்கள் மோட்டர் சைக்கிளை தீ வைத்து எரியூட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டர் சைக்கிள் வெடித்து எரிந்த சத்தம் கேட்டு எழுந்த உரிமையாளர் வீட்டுக்காரர் மற்றும் அயல் வீட்டுக்காரர் தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.