யாழில் இருவரை வழிமறித்து கடித்து காயப்படுத்திய வினோத கும்பல்!

மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வரை வழி மறித்த நால்­வர் அவர்­களை மோச­மா­கத் தாக்­கி­ய­து­டன் கடித்­தும் காயம் விளை­வித்­த­னர். தாக்­கு­த­லில் ஒரு­வ­ருக்­குப் பல் உடைந்­தது.
இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இரவு 8 மணி­ய­ள­வில் சர­சாலை கன­கன்­பு­ளி­ய­டிச் சந்­தி­யில் இடம்­பெற்­றது.
வேலைக்­குச் சென்­று­விட்டு மோட்­டார் சைக்­கி­ளில் மட்­டு­வி­லில் உள்ள வீட்­டுக்கு வரும் வழி­யில் கன­கன்பு­ளி­ய­டிப் பேருந்­துத் தரிப்­பி­டத்­தில் நின்ற நால்­வர் வழி மறித்து கார­ண­மின்­றித் தாக்கிக் கடித்­து­விட்­டுத் தப்­பி­யோ­டி­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.
தாக்­கு­தல் மற்­றும் கடிக் காயங்­க­ளுக்கு இலக்­கான மட்­டு­வில் மத்­தி­யைச் சேர்ந்த இருவரும் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். சாவ­கச்­சேரி பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர் .

கடிகாயம்கும்பல்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment