யாழில் சட்டவிரோத இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது

போதைப் பொருள் விற்பனை செய்யும் இடங்கள், பாலியல் தொந்தரவு இடம்பெறும் பகுதிகள் என்பன யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன.   இவ்வாறான 28 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அந்த விவரங்கள் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.  

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் இதனைச் செய்துள்ளது.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும்  வன்முறைகள் தொடர்பில்,மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடந்த சிறுவர் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்குத் திட்டமிட்ட ரீதியில் போதைப் பொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றமை, மதுபானங்கள்  வழங்குகின்றமை தொடர்பிலும் இந்தக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இடம்தொந்ததரவுபாலியல்பொருள்போதையாழ்ப்பாணம்விற்பனை
Comments (0)
Add Comment