ஸ்ரீ கடற்படை எமது கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும்!

ஸ்ரீலங்கா  கடற்படையினரால்  அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை  விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் – முள்ளிக்குளம்  கிராம மக்கள்   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம்  இன்று  காலை  7.30 மணியளவில்  முள்ளிக்குளம்  கிராம நுழைவாயிலில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தம்  காரணமாக கடந்த 2007  ஆம் ஆண்டு   ஸ்ரீலங்கா கடற்படையினரால் முள்ளிக்குளம்  கிராம மக்கள்   கட்டாயமாக   வெளியேற்றப்பட்டனர்.

பத்து வருடங்களை  எட்டியுள்ள நிலையில், இன்றுவரை தமது கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து  எந்த வித பதிலும் கிடைக்கவில்லை என  பாதிக்கப்பட்ட   குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  தமது  கிராமத்திலுள்ள ஸ்ரீலங்கா  கடற்படையினரை  வெளியேற்றி  தம்மை மீள்குடியேற்றுமாறு  வலியுறுத்தியே   இந்த போராட்டதைதை ஆரம்பித்துள்ளனர்.

கிராமம்மக்கள்மன்னார்முள்ளிக்குளம்ஸ்ரீ கடற்படை
Comments (0)
Add Comment