தமிழின விடிவிற்காய் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆரம்பமாகிறது
அன்னையின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், மட்டக்களப்பு போராளிகளால் அன்னையின் நினைவாலயம் தூய்மையாக்கப்பட்டு முதல்நாள் நினைவஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அன்னை பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார்.
முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.
உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது.
ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் .
தமிழினம் வாழும் வரையும் த்மிழினத்திற்காய் மரணித்தவர்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க கூடாது.
உங்களுடைய கனவு என்றோ ஒருநாள் எங்கள் தேச்த்தின் விடியலாய் ஒளிரும்
இவ்வேளையில் செண்பகம் இணையத்தளமும் தமிழினத்திற்காய் தன்னுயிரை ஈன்ற பூபதி அம்மாவிற்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்வதில் பெருமை கொள்கின்றது.