குறித்த பகுதியில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை இந்த கைக்குண்டுகளைக் கண்டு பொலிஸாருக்குனு தகவல் அளித்துள்ளனர்.
அவ்விடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் கைக்குண்டுகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்துள்ளனர்.
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இதற்கு முன்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதே இடத்தில் கைக்குண்டு மற்றும் பலவகையான தோட்டாக்கள் மலசலக்குழி அகழ்வின்போது கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.