அம்பாறை, சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கில் என்பவரே இவ்வாறு இவ்வாறு சடலமாக மீட்டக்கப்பட்டவராவார்
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்காக குறித்த நபர், ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணியளவில் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் மறுநாள் காலை வரை வீடு திரும்பாததையிட்டு உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
இந்நிலையிலே, நாவிதன்வெளி 6ஆம் கொலனிப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியில் வசித்து வந்த பெண்ணும் அவரது கணவரும் சவளக்கடைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சடலத்தை, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் இஸ்மயில் பயாஸ் ரசாக் சென்று பார்வையிட்டு பிரதே பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். உயிரிழந்த நபர், செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், அக்காணியில் வேறொரு பகுதியிலிருந்து மீட்டதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சவளக்கடைப் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.