அம்பாறையில் வேலையில்லா பட்டதாரிகள் புத்தாண்டை துக்க தினமாக அனுஷ்டிப்பு!

அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் காரைதீவு விபுலானந்த சதுக்க மருகே கூடாரமிட்டு 45ஆவது தினமாக சத்தியாக்கிரப் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மேலும் கருத்துரைக்கையில்,
கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் கூட இவ்வாறு தொழிலுக்காகப் போராடியதில்லை. ஏதோ தொழில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் நல்லாட்சியில் இவ்வாறு தொழிலுக்காக மாதக்கணக்கில் வீதிகளில் அல்லாடுவது கவலையளிக்கின்றது.
ஆளுங்கட்சியினரும் சரி எதிர்க்கட்சியினரும் சரி எம்மை ஏறெடுத்துப்பார்க்கிறார்களில்லை. இதுவரை தீர்வில்லாமல் காத்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு வருடப்பிறப்புக் காலத்திலும் இவ்விதம் தகரக்கொட்டிலில் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கேற்பட்டுள்ளதை நினைந்து அழுகின்றோம். ஆனால் மனம் தளரவில்லை.


இதுவரை புத்தாடைகளுக்கு பெற்றோரிடம் தங்கியிருந்தோம்.ஆனால் இனி அவ்விதம் செய்யமாட்டோம். எமது வருமானத்தில் தான் எதனையும் செய்வோம். அதுவரை காத்திருப்போம். அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராயிருக்கின்றோம் என்றார்.
அம்பாறை மாவட்டத்தின் வேலையில்லா சிங்களப்பட்டதாரிகள் புதுவருடப் பிறப்பின் பின்னர் காரைதீவில் கடந்த 45 தினங்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்பேசும் பட்டதாரிகளோடு இணையவுள்ளதாக பட்டதாரியொருவர் தெரிவித்தார்.

அம்பாறைசிங்களன்தமிழ்துக்க தினம்புத்தாண்டு
Comments (0)
Add Comment